Saturday, April 11, 2009

இல்லாத ஊருக்கு, வழி சொன்ன வித்தைக்காரி !!!

1.

ஆற்றினில் மிதக்கும் -
தாமரை இலை நாம் ,
அந்தி சாயும் பொழுது -
அவரவர் நனைந்த ஈரம் பார்த்து ,
ஒவ்வொருவர் காதலை எடை போடுவோம் ..!

2.

இல்லாத ஊருக்கு -
வழிகேட்ட வழிப்போக்கன் நான் ,
அதற்கும் வழி சொன்ன -
வித்தைக்காரி நீ ..!

3.

நவகிரகம் சுற்றும் எல்லோரும் -
நீ சுற்றிக்கொண்டிருப்பதை பார்த்து ,
பத்தாம் கிரகம் இருக்கிறதென்று -
ஊர் முழுக்க உளருகிறார்கள் !!!

4.

அக்கம் பக்கம் பார்க்கையில் -
என் ஊடல் உணர்ந்து -
தள்ளி தள்ளி போவாய் ...
உன்னை மட்டும் பார்க்கும்போது -
என் உள்ளம் உணர்ந்து ,
அருகில் அருகில் வருவாய் ..!

5.

உனக்கும் எனக்கும் சண்டைகள் வந்தால் ,
என் தோழர்களுக்கும் ,
உன் தோழிகளுக்கும் ;
சண்டை மூட்டிவிடும் -
கலகக்காரி நீ ..!

6.

ஆகாயம் பார்த்து பார்த்து -
அடிக்கழுத்து வலிக்கிறதென்றாய் ,
அப்படி என்னதான் பார்த்தாயென்று -
அந்த கண்கள் பார்த்து பார்த்து -
அதனுள் ஆகாயம் உள்ளதென்றேன் ..!

7.

நீ வளர்க்கும் மீண் குஞ்சுகளோ ?
அதனால்தான் கோவிலில்கூட,
லஜ்ஜை தெரியாமல் -
இச்சிக் கொள்கின்றனவோ ?

8.

நீ நட்டுச்சென்ற செடிகள் எல்லாம் -
மரமாகவே மாட்டேன் என்கிறது ...
பிறகுதான் தெரிந்தது ,
குட்டிச்செடிகளுக்குதான் -
அதிக நேரம் செலவிடுகிறாயாம் ...

9.

உன் உள்ளம் நியாபகம் வந்தால் ,
கண்கள் மூடி, இதயம் தொட்டு -
சினுங்கள் கேட்கின்றேன் ,
உன் ஊடல் நியாபகம் வந்தால் ,
கண்கள் திறந்து, கைகள் விரித்து -
அனைப்பினை உணர்கின்றேன் ..!

10.

ஆசைகள் துறக்க புத்தன் வந்தான்,
அகிம்சை வளர்க்க காந்தி வந்தான்;
ஆனால் உலகம் ருசிக்காது ...
ஆசை வேண்டும், இம்சை வேண்டும் -
ஆதலால் நாம் வந்தோம் ...