Tuesday, November 25, 2008

தேவதைகளின் இருப்பிடம் - Part 3

Part 1>
Part 2>

என்னடா இந்நேரத்துக்கு -
காலை வணக்கம் சொல்கிறாயென்றாய் ...
உனைப்பார்த்த பின்னர்தானே -
எனது நாள் துவங்குகிறது ..!


எனக்கும் 'F9' keyக்கும் சண்டை ...
உன் மடலுக்கு காத்திருந்து காத்திருந்து -
Outlookல் 'F9' ஐ சதா தட்டியதால் -
அதற்கு தலைவலிக்கிறதாம் ..!


எப்படா கிளம்புவே என்றதர்க்கு ,
ஆறு மணிக்கு என்றாய் ...
பேய்கள் எல்லாம் '12 மனிக்கு'தானே கிளம்புமென்றதர்க்கு ,
பேயைப்போல் பாவனைசெய்து பயப்படுத்தினாய் ...
எப்படிச்செய்தாலும் எனக்கு நீ தேவதைதான் ..!



உனை பார்த்துவிட்டுப்போகலாமென -
எண்ணிக்கொண்டிருந்தேன் ,
எப்படித்தான் தெரிந்ததோ -
என்னோடு மழையும் சேர்ந்துகொண்டது ..!



குடை தளர்த்தி -
கொஞ்சம் தரிசனம் கொடு ...
ஊரிலுள்ள மழையனைத்தும் -
உனைப்பார்க்கத்தான் ஆசை ஆசையாய் பெய்கிறது ..!



அந்த மழை அழகா -
மழையில் நனையும் நீ அழகா ,
பார்க்கலாமென ஒடோடி வந்தேன் ...
அதற்குள் அவசரமாய் கிளம்பிவிட்டாய் ...


குடைமடக்கி பேருந்தினில் நுழைந்தாய் ...
இடைப்பட்ட தருணத்தில் உனைப்பார்த்த மழை ,
" நான் பார்த்துவிட்டேன், நான் பார்த்துவிட்டேன் " , என்று சத்தம் போட்டதை -
சோகத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன் ..!



அந்த பொண்ணு அழகாய் இருக்கிறாளென்று -
உன்னிடம் காட்டுகையில் ,
அவசரப்படேல் நண்பாவென்று மிறட்டி ,
அவ்வப்போது என் அம்மாவாகவும் -
அவதாரமெடுக்கும் அதிசயம் நீ ..!

1 comment:

Anonymous said...

Wow...nice poems. keep rocking