Inspired by a Song sequence in which a Girl dancing in the Rain ...
மழையில் நனைகிறதுன் மேலாடை ,
சாலையெங்கும் வழிகிறது அழகு!
எந்தவித தயக்கங்களும் இல்லாமல் யாருமில்லாத சுதந்திரத்தில் மழை நனைக்க, அழகு தெறிக்க சாலையில் ஓடி, நீ பேருந்து பிடிக்கும் அழகே தனி அனுபவம்...அதுவும் அவள் மனதுக்கு நெருக்கமான தோழி ஒருத்தியாயிருக்கையில், இன்னும் அற்புதமான அனுபவமாகி விடுகிறது அது!
மாலையில் வாடா என்றாய், மழைதான் வந்தது... உனைப்பார்க்க முடியவில்லை ..!
மழையில் நனைய விட்டு அதன் அறிமுகம் செய்தவள் அவள்! தண்ணீர் பட்டாலே துடித்திப்போகிற வேற்று கிரக வாசியைப்பொல் இருந்த என்னை, இருள் சூழ்ந்த மாலையில், பனி படர்ந்த மழையில் நடக்க விட்டிருந்தாள்.
யாரோடும் அதிகம் பேசாத அவள் என்னை மட்டும் சேர்த்துக்கொண்டதில் சந்தோசப்பட்டுக்கொண்டிருந்த மனதை; மிக மென்மையான இயல்பு (அவள் எப்படி அவ்வளவு அழகாக புன்னகை சிந்துகிறாள் என்பது நான் இன்னமும் அதிசயிக்கிற விசயம்) வெகு நிதானமான பெண்மை, முடிவெடுக்கிற ஆற்றல், நிறைவான தோற்றம் என மொத்தமாய் மிக அதிகமாய் வன் முறைசெய்து கொண்டிருந்தாள் அவள்...
அதே போல் யாரொடும் அதிகம் பேசாத என்னை , நேரம் போவது தெரியாமல் பேசச்செய்வதவலும் அவளே. மறந்துபோன, மறைந்துபோன உயிர் தோழியை நினைவுபடுத்தியவளும் அவளே.
அழகு தெறிக்க,வளைவுகள் அதிர, பெண்மையின் இயல்பான வாசனைகளோடு, மழையில் நனைகிற அழகுகளோடு, மிக முக்கியமானதாய், அவசர கதியிலும் என்னை தவிர்க்கவில்லை என்கிற மிக நெருக்கமானதான சினேகங்களோடும் என் நாட்களை அற்புதமாக்கிக்கொண்டிருந்தாள்...
என்ன ஒரு சோகம் அவள் இருக்கும் இடத்தில் நான் இருக்கும் தவம் அல்லது வரம் எனக்கு இதுவரையும் கிடைக்கவில்லை, இனிமேலும் கிடைக்கப்போவதில்லை...
//
உன்னைத்தொட்ட மழைத்துளிகள் -
விழுந்த இடங்களில்,
வண்ணத்துப்பூச்சிகள்...!
//
காற்றில் கரைகிறது -
உன்னில்பட்ட மழைத்துளிகள் ,
சாலையெங்கும் பூவாசம்...!
//
நீ
இந்தப்பக்கமாய் வருவாய் என்றே -
யாருக்கும் வழிவிடாமல் காத்திருக்கிறது ,
உனது அலுவலக சாலை வழி!
//
நீ -
வீதியில் வரும் வரை ,
காத்திருந்து ஒளிர்கின்றன ...
ஆங்காங்கே இருக்கிற -
சாலை விளக்குகள்..!
//
அவள்
ஓடிக்களைத்தில்
மூச்சு வாங்கிக்கொண்டிருக்கிறது
காற்று!
//
பனி-
பூத்திருக்கிறது சாலை ...
அவள்-
அலுவலகம் வருகிற -
நேரத்திர்காக...
//
அதிர்ந்து வளைகிற அழகுகளில்
சிதறுகிறதென் கவனம்...
உன் மேலாடையில் வழிகிற
காற்றில் கரைகிறதென் சுவாசம்...
கன்னங்களில் இழைகிற கூந்தல்கற்றைகளில்
சிக்குகிறதென் கண்கள்...
நீ இழுத்து விடுகிற மூச்சில்
நிறைகிறதென் உயிர்!
பின் குறிப்பு:
//
இத்தனை நெருக்கமான தோழியாய் இருந்தும் அவள் தினம் அதிகாலையில் சோம்பல் முறிப்பதை பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு அமைந்திருக்கவில்லை. அது ஒரு மாதிரியான தவிப்பாகத்தான் இன்றளவும் இருக்கிறது.
//
அவளை இப்பொழுது அதிகம் பார்ப்பதில்லை, நான் மழையில் நனைவதும் இல்லை... பின்னர் ஒருவேளை நிகழக்கூடும், நிலவொளியில் நிகழக்கூடும்... முன்பு நிகழ்திருக்கிறதைப்போலான தருனம்தான்... ஒரே வித்தியாசம், இப்பொழுது தோழியாக பார்க்கக்கூடும் ..!
//
காலம் மாற்றங்களை
கவ்விக்கொண்டு பயணிக்கிறது...
மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன!
நட்புடன்,
நான் ..!
4 comments:
gud narration dude...different frm the usual poems
Wow...Fantastic narration with fantastic poems da. Lucky ur frnd :-)
hey one more poem for her :-) beautiful .. what did she say ;-)
@Shankar and Ravi: Tx guys.
@Anu: pochuda ennai vambula maati vidave irukariya nee. Kavithai padichiya enjoy panniniyanu iru ma.
Post a Comment