Tuesday, February 10, 2009

கண்ணக்குழியில் செய்த குழிப்பனியாரங்கள் ..!

வடைசுட்ட பாட்டி -
அதைத்திருடிய அண்டங்காக்கா ,
கதை பழையது என்றாலும் ,
" நீ சொல்கையில் புதிதாய் இருக்கிறது".



குழிப்பனியாரம் பிடிக்குமென்று -
ஆசையாய் செய்துகொடுத்தாய் ,
இரண்டு மட்டும் இனிப்பாய் இருந்தது,
அவைமட்டும் உன் கண்ணக்குழியில் செய்தவையோ ..!



எம்மொழியில் வேண்டுமானாலும் பேசிக்கொள் -
எனக்குப் புரியும்,
உன் பாவணை மட்டும் பார்ப்பதால் ..!


விடியற்காலையில்,
அறைக்கண்ணால் விழித்து,
அழகாய் சோம்பல் முறிக்கையில்;
இன்னொரு கவிதைக்கு வித்திடுகிறாய் ..!



இப்படி ஒரு விடியல் கிடைப்பதால்தான் -
சூரியன் சூடேரிப்போகிறது,
தயவு செய்து -
கொஞ்சம் தாமதமாய் கண்விழி ..!


ஓடியாடி வேலை பார்த்து -
நீ உறங்கிபோகையில், உலகே ஓய்வெடுக்கிறது,
அடுத்த நாள் விழிக்கையில் -
குட்டிப்புயல் கிளம்பிவிட்டதென்று செய்தி வருகிறது ..!


அன்று ஓடை தாண்டுவதற்கு கரம்பிடித்தபொழுது -
விட்டுவிடாதே என்றாய் ...
இன்று பேருந்தில் நுழைவதற்கு -
கரம் நீட்டுகையிலும் ,
விட்டுவிடாதே என்றாய் ...
நாளை எனைக் கைப்பிடிக்கையிலும் ,
விட்டுவிடாதே என்பாய் ...
எனக்கு மட்டும்தான் தெரியும் ,
ஓடையிலிருந்தே உன் கரம் பிடித்துக்கொண்டிருப்பது ..!



தூசுபட்டு கலங்கிய கண்கள்கண்டு ,
" ... அழாதடா ப்ளீஸ் -
யாராச்சும் அழுதா கூட ,
சேர்ந்து அழத்தான் தெரியும்,
ஆறுதல் படுத்த தெரியாது ", எனும் -
அப்பாவி பெண்ணாகவே இருக்கிறாய் ..!


எழுதிய கவிதையை ,
உனக்கும், விகடனுக்கும் அனுப்பினேன் ...
நல்லா இருக்குடா என்றாய் ,
விகடனைப்பற்றி மறந்துவிட்டேன் ..!


கடல்பார்க்கப் போகையில் -
அழகு குறைத்துச் செல் ,
தேவதையென்று நினைத்து -
அலையனைத்தும் உன் பின்னால் வந்துவிடும்,
அப்புறம் ஊரே வெள்ளக்காடுதான் ..!



காற்றடித்தாலே -
குளிர்கிறதென்கிறாய் ...
உன் மடி பார்த்தாலே -
தூக்கம் வருகிறதென்கிறேன் ..!


அசைவம் வேண்டாம் -
அந்த ஜீவன்கள் பாவமென்றாய் ...
எனை மட்டும், தினம் தினம் -
பார்வையாலேயே கொத்தித் தின்பது நியாயமோ ..!

3 comments:

Anuradha Gopalakrishnan said...

mudila pa .. mudila :-)

Anonymous said...

deiii too much...but lovely poems. u always rock it dude :-)

Prabhu Chinnappan said...

@Anu and Shankar: Tx guys. U too try the paniyaram and experience this :-)