Tuesday, February 17, 2009

முத்தங்கள் யாவும் ..!

முத்தங்கள் தந்து -
இனித்தவை எவையெனக்கேட்டாய் ,
இயலாத செயலென -
திருப்பிக் கொடுத்துவிட்டேன் !


முத்தம் கேட்டதற்கு முறைத்தாய் -
முறைத்துப்பார் என்றேன் ,
முத்தம் கிடைக்குமென்ற நினைப்பில் !!!



உன்னோடு நடக்கும் சண்டையில் -
முதல் சுற்றுக்களில் வென்றாலும் ,
கடைசியில் முத்தங்கள் தந்து -
மொத்தமாய் வென்றுவிடுகிறாய் !!!



நீ ரொம்ப கெட்டப்பையன் என்றாய் ...
ஏனெனக் கேட்டால் ,
பல முத்தங்கள் வாங்கிக்கொண்டு -
சில மட்டும் தருகிறேனென்றாய் !!!



நீ எது கேட்டாலும் ,
முத்தம் மட்டுமே -
தரத்தோன்றுகிறது !!!



உடம்பு சரியில்லை என்றேன் ...
காலை - இரண்டு முத்தங்கள் ,
மதியம் - உணவுக்கு முன் ஒன்று ;
இரவு - தூங்கும்வரை, என்று ;
எழுதிக்கொடுத்தாய்!!!



உன் தொலைபேசி வழி முத்தங்களை -
நான் கண்மூடி இரசிக்கின்றேன் ,
அதன் சத்தம் கேட்ட தொலைபேசியோ-
என் காதுக்குள் இரசிக்கின்றது ..!



உடுத்திக்கொள்ள எதுவுமில்லாத நேரங்களில் ,
என் முத்தமெடுத்து அணிந்துகொள்கின்றன -
உன் உதடுகள் ..!


என்னைப்பற்றி நாலு வார்த்தை சொல்லென்றாய் -
“முத்தம்” என்று நான்கு முறை சொன்னேன் ,
'அதைத்தவிர உனக்கு ஒன்றுமே தெரியாதா', என்றாய் ...
உனைப்பற்றி சொல்ல துவங்குகையில் ,
உதடுகள் யாவும் -
உன் முத்தங்களையே சொல்கின்றன ..!



‘எனக்கு உன்னைப்போல -
கவிதையெழுதத் தெரியாது’ என்றாய் ,
எனக்கு உன்னைப்போல -
முத்தம் தரத்தெரியாது ..!



உலகின் மூன்று பங்கு நிலத்தை -
ஆக்கிரமித்தாலும் ,
உன் பாதம் மட்டுமே முத்தமிடும் -
பாக்கியம் பெற்றிருக்கிறது கடலலை ..!



ஈரக்காற்று -
உதடுதொட்டு போகையில் ,
உன் முத்தமென்று நினைத்து -
ஏமாந்துபோகிறேன் ..!


நீ கொடுத்த முத்தமனைத்தும் -
திருப்பித் தரவேண்டுமென்றால் ,
என் வாழ்வு முழுதும் -
முழித்துக் கொண்டிருக்கவேன்டியதுதான் ..!


உன்னிடம் இருந்துவரும் அனைத்து மடல்களும் -
"அவசரமாய் ஆறு முத்தம் தேவை" என்றே -
முடித்து தொலைக்கிறது ..!




கணவுகளின் தொலைவு -
நிஜமாகும்வரை ,
முத்தங்களின் தொலைவு -
முடிந்துபோகும்வரை ..!



நீ முத்தமிடும் பொழுதெல்லாம் -
நான் குட்டி குட்டி "அம்னீசியாவால்" ,
அவதிப்படுகின்றேன் ..!


அத்தனை கூட்டதினிடையே -
யாருக்கும் தெரியாமல் முத்தம் கேட்டாய் ,
தோட்டமே வைத்திருந்தாலும் -
திருட்டு மாங்காய்தான் சுகம்போலும் ..!




முத்தங்களுக்கு வர்ணம் சொன்ன முனிவர்-
நீயாகத்தான் இருப்பாய் ...
"பல் விளக்காத காலை முத்தம்", பச்சையாம் -
"சாமி கும்பிடும் இடைவெளியில் கொடுத்ததோ", வெண் நிறமாம் ;
"அதிகாலை முத்தம்", வெட்கச்சிவப்பாம் ;
"உச்சி வெய்யில் முத்தமோ", உஷ்ன மஞ்ஜளாம் -
"இரவு முத்தம் யாவும்", காரிருளாம் ..!



தருவது நீ -
பெற்றுக்கொள்வது நான் ,
நந்தியாக வரும் வெட்கத்தை -
விரட்டிவிடு..!



முத்தத்தின் தித்திப்பில் திசைமறந்து -
மளிகைக்கடையில் ,
“முத்தம் இரண்டுகிலோ வேண்டுமென்று”, உளரி -
மானம் போகக்கண்டேன் ..!



காற்று வழி முத்தம் அனுப்புகையில் -
பத்திரமாய் மூடி அனுப்பு ,
விண்ணிலேயே தேன் கிடைப்பதால் -
தேனீக்களெல்லாம் திருடிக்கொண்டுபோகிறது ..!




இமைகள் படபடக்கின்றன ,
உதடுகள் துடிக்கின்றன ;
காதுகள் விடைக்கின்றன ...
ஒற்றை முத்தத்தில் ,
ஓறாயிரம் நிகழ்வுகள் ..!


உன் முத்தங்கள் யாவும் -
மொத்தமாக கிடைத்தால் ,
காசிக்கு போகாமலே -
மோட்சமடைவேன்..!

4 comments:

Anonymous said...

awesome poems da...well narrated one. u always write nice poems... so wht else i'll comment dude.

Unknown said...

முத்தத்தின் தித்திப்பில் திசைமறந்து -
மளிகைக்கடையில் ,
“முத்தம் இரண்டுகிலோ வேண்டுமென்று”, உளரி -
மானம் போகக்கண்டேன் ..!

- Muldiyala Ponga! Simply superb!!

NIMAMI said...

If this is dedicated to your 'she'...then "She's lucky" :)

Prabhu Chinnappan said...

Tx da shankar.
@SatS: Take it easy
@Manasa: Let certain things be unanswered, unsolved. That’s what makes life exciting :-)