தோழமை ஒன்று தொலைந்தது -
தொடங்கிய கவிதை முடிந்தது ;
ஜென்மத்தின் ஓரத்தில் நிற்கிறேன் ,
இனிவரும் ஜென்மத்தில் சந்திக்கிறேன் ...
பழகிய நாட்கள் பரவசம் ,
இழந்த நாட்கள் என்வசம் ;
இழக்கும் நாட்கள் உன்வசம் ...
தேடுவதற்கு துணிவில்லை ,
விடுவதற்கும் மனமில்லை ;
இடியும் மின்னலும் மழையில்லை ,
மண்ணில் வீழ்கையில்தான் மழையது ;
நல்லது எண்ணுவது நட்பில்லை ,
நம்பிக்கை அதுவே நட்பது ..!
3 comments:
Naladu enuvadu Natpillai…
Nambikkai aduve Natpadu
---These words are really beautiful… Anbavichi padikalaam...
your words have started to make the readers feel…Good Prabhu..n :-) carry on the good work..
Appreciating the depiction and flawless writing … Good one Prabhu …
Etho enn pera kappathitinga !!! Romba perumaiya irukku. Romba nallairukku
Post a Comment