சுமந்து பெற்றால்தான் தாயென்றால்,
அவளைப்போல் அதிகம் அன்பு -
உன்மேல் செலுத்தும் என்னை ,
என்னவென்று சொல்வாய் ..!
தூக்கம் வந்தால் -
தாய்மடி என்றாய் ...
அதுபோல்தான் நானும் -
என் தோள் சாய்ந்துகொள்வாய் ..!
தலைகோதி ,
தாலாட்டு பாடுவாளென்றாய் ...
நெற்றி முத்தத்தில் -
நண்பனின் நேசம் அறிந்துகொள்வாய் ..!
முதல் வார்த்தை , முதல் உலகம் ,
சொல்லித் தந்தவள் அவளென்றாய் ...
இனிவரும் உலகனைத்தும் -
கடந்து செல்ல ,
வழித்துணைக்கு நானென்பேன் ..!
அந்த வானம், பூமி -
அத்தனையும் தந்து கேட்டாலும் ,
தாயைவிட சிறந்ததில்லை என்றாய் ...
அந்த தாயின் வீட்டினில் -
எனக்கும் கொஞ்சம் இடம் கொடு ..!
அந்த பொண்ணு அழகாய் இருக்கிறாளென்று -
உன்னிடம் காட்டுகையில் ,
அவசரப்படேல் நண்பாவென்று மிறட்டி ,
அவ்வப்போது என் அம்மாவாகவும் -
அவதாரமெடுக்கும் அதிசயம் நீ ..!
கொடுக்க கொடுக்க -
சேரும் சொத்து ,
அன்னை அன்பு மட்டும்தான் ...
பழக பழக ,
மேலும் உயரும் ,
நட்பின் புனிதம் மட்டும்தான் ..!
என் விழியில் நீர்த்துளி பார்த்துவிட்டால் -
மொத்த உலகையும் பொசுக்கிவிடும் ,
மூர்க்கமான காளி வேடம் கொள்வாள் ...
பாசம் வைக்கும் எவர்க்கும் -
அன்பனைத்தும் அள்ளிக்கொடுக்கும் ,
கருனை தெய்வமும் ஆவாள் என்றாய்...
அந்த தெய்வத்திற்கு பக்தனாகும் பாக்கியம் -
என்னில் மட்டும் உள்ளதென்பேன் ..!
No comments:
Post a Comment