நீ புடவை கட்டும் அழகுபார்த்து ,
கொடுத்துவைத்த புடவை என்றார்கள் ...
உனை கட்டிக்கொள்பவனும் -
கொடுத்துவைத்தவன்தான் !!!
புடவையில் எப்படி இருக்கிறாயென -
அம்மனிடம் கேட்கிறேன் ,
உனைப்பார்த்து -
அதிகம் பொறாமை கொள்பவள் ,
அவள்தான் !!!
புடவையில் இருந்த -
வெள்ளி ஜரிகை அனைத்தும் ,
தங்கமாய் மாறிப்போனது ...
அணிந்துகொண்ட மேனி அப்படி !!!
புடவையழகை திருட்டுப் பார்வை -
பார்த்ததை கண்டு ,
அடிக்க வந்தாய் ...
ஆனானப்பட்ட விசுவாமித்திரனே -
அரை நாழிகை சலனம் கொள்கையில் ,
எம்மாத்திரம் நான் !!!
பட்டுடுத்தும் தோரணை பார்த்து -
பார்கடல் வசிக்கும் பரந்தாமனும் ,
புது அவதாரம் எடுத்து -
பூமி இறங்குவான் ..!
புடவை கட்டியது போதும் ,
எப்பொழுது -
எனை கட்டிக்கொள்வாய் ..!
நீ புடவை கட்டும் அழகு பார்த்து ,
எனக்கும் புடவை கட்ட -
ஆசை வருகிறதென்றேன் ...
எனை கட்டிக்கொள்ள மாட்டாயாவென புலம்பினாய் ???
இப்பொழுது நீ இல்லாத புடவை ,
இரவு புடவை இல்லாத உனை ??!!!
No comments:
Post a Comment