நாளை என் -
வாழ்க்கை பயணம் மாறினாலும்,
நம் நட்பின் பயனம் -
என்றும் தொடரும் ...
ஒரு துளி ஆயினும் -
ஓராயிரம் என்றாலும் ,
அதன்பேர் மழைதான் ...
தேவதை ஆயினும் -
பிசாசு என்றாலும் ,
எனக்கு நீ தோழிதான் ...
தவறே செய்தினும் -
தங்கமென்றே சொல்லத் தோண்றுகிறது ,
தொலைவில் இருந்தாலும் -
தோள் சாய்ந்திருப்பதுபோல் உணர்கிறேன்..!
ஆர்ப்பாட்ட பேச்சுக்கள் வேண்டாம் -,
ஆரவார வரவேற்ப்பு வேண்டாம் ;
அழகிய புன்னகைகூட வேண்டாம் ,
தோழியென்ற நினைவே போதும் ...
இப்படியே கைகோர்த்து வா ,
உலகத்து எல்லை தாண்டியும் -
நடந்து கொண்டிருப்பேன் ..!
அருகில் இருக்கும் -
அழகிய பெண்னை பார்த்து வழிகையில் ,
உன் கைக்குட்டை கொடுத்து உதவிடும் -
உன்னத தோழி நீ ..!
நியாயிரு விடுமுறை நாள்,
ஆதலால் குளிப்பதில்லை ,
அரைகுறை ஆடையில் இருப்பினும் -
நட்பெனும் உடை மேலிருப்பதால் ,
ஏடாகூடமாய் பார்ப்பதில்லை ...
கோவில் பிரசாதம் கூட -
சுத்தம் பார்த்து சுவைப்பவன்,
உன் எச்சில் தட்டில் -
உணவு எடுத்து சுவைக்கையில் ,
கொண்ட கொள்கை அனைத்தும் -
கொஞ்ச நேரம் காணாமல் போய்விடும் !!!
என்ன சொல்லிவிட்டேன் -
இப்படி கோபப்படுவதற்க்கு என்றாய் ?
சொல்லிய சொல் முக்கியமல்ல ,
சொன்னது நீ என்பதுதான் ..!
எப்படி நீ திட்டினாலும் -
உறைக்கவே மாட்டேன் என்கிறது ...
எது சொன்னாலும் -
கொஞ்சி குழைந்து சொல்வதால் ..!
அடடா அழகிய கவிதையென்று ,
ஆயிரம் பேர் வாழ்த்தினாலும் ,
"ம் பரவாயில்லை டா" எனும் -
உன் வார்த்தைகளில்தான் -
அந்த கவிதையே முழுமை அடைகிறது ..!
வானம் பார்க்க -
எனக்கு மேலே பார்க்க வேண்டும் ,
பூமிதனை பார்க்க -
தாழ்ந்து பார்த்திடல் வேண்டும்,
உனை பார்க்கும்போதுதான் -
எனக்கு நிகராய் அருகில் பார்க்கிறேன் ..!
வயலின் வால்த்தனம் ,
தபேலா திட்டுக்கள் ,
பியானோ பேச்சுக்கள் ,
புல்லாங்குழல் பார்வைகள்,
அடடா சிம்பொனி உருவாக-
நம் சந்திதிப்பு ஒன்றே போதும் ..!
6 comments:
"violin vaalthanam" hilarious...but sweet flow of words!! :-)
To whomsoever it is devoted..."Stay forever for each other"
who is this luckiest frnd prabhu?
Superb prabhu :-)
Was wondering who is the inspiration for this poem…
U.S taken the poet in u to next level… Rock it buddy…
Wow Prabhu!!!
Simply superb…
paditha piragum maru murai padika thoondum ungaladu varthaigal.
endrum ungalodu payanika vaazhthukal……
continue the good work… :-)
Hey good depiction Boss …. Fantastic … you are immersing and making the reader to pick the pearls….. original
But still … Kallaaala adipaen …. Spelling mistakes irukkuthu ….
correct it :-)
@Manasa:
Sometimes words fall down easily...and such gud poems arise themselves whn we hv wonderful frnd to dedicate.
@Priya:
who else it will be? Its for my best frnd :-)
@Dinesh:
Tx dude... will be bck home soon
@Senthil:
Tx for the wishes da.
@Shiney:
Mistakes corrected :-)
Post a Comment