Tuesday, February 17, 2009

முத்தங்கள் யாவும் ..!

முத்தங்கள் தந்து -
இனித்தவை எவையெனக்கேட்டாய் ,
இயலாத செயலென -
திருப்பிக் கொடுத்துவிட்டேன் !


முத்தம் கேட்டதற்கு முறைத்தாய் -
முறைத்துப்பார் என்றேன் ,
முத்தம் கிடைக்குமென்ற நினைப்பில் !!!உன்னோடு நடக்கும் சண்டையில் -
முதல் சுற்றுக்களில் வென்றாலும் ,
கடைசியில் முத்தங்கள் தந்து -
மொத்தமாய் வென்றுவிடுகிறாய் !!!நீ ரொம்ப கெட்டப்பையன் என்றாய் ...
ஏனெனக் கேட்டால் ,
பல முத்தங்கள் வாங்கிக்கொண்டு -
சில மட்டும் தருகிறேனென்றாய் !!!நீ எது கேட்டாலும் ,
முத்தம் மட்டுமே -
தரத்தோன்றுகிறது !!!உடம்பு சரியில்லை என்றேன் ...
காலை - இரண்டு முத்தங்கள் ,
மதியம் - உணவுக்கு முன் ஒன்று ;
இரவு - தூங்கும்வரை, என்று ;
எழுதிக்கொடுத்தாய்!!!உன் தொலைபேசி வழி முத்தங்களை -
நான் கண்மூடி இரசிக்கின்றேன் ,
அதன் சத்தம் கேட்ட தொலைபேசியோ-
என் காதுக்குள் இரசிக்கின்றது ..!உடுத்திக்கொள்ள எதுவுமில்லாத நேரங்களில் ,
என் முத்தமெடுத்து அணிந்துகொள்கின்றன -
உன் உதடுகள் ..!


என்னைப்பற்றி நாலு வார்த்தை சொல்லென்றாய் -
“முத்தம்” என்று நான்கு முறை சொன்னேன் ,
'அதைத்தவிர உனக்கு ஒன்றுமே தெரியாதா', என்றாய் ...
உனைப்பற்றி சொல்ல துவங்குகையில் ,
உதடுகள் யாவும் -
உன் முத்தங்களையே சொல்கின்றன ..!‘எனக்கு உன்னைப்போல -
கவிதையெழுதத் தெரியாது’ என்றாய் ,
எனக்கு உன்னைப்போல -
முத்தம் தரத்தெரியாது ..!உலகின் மூன்று பங்கு நிலத்தை -
ஆக்கிரமித்தாலும் ,
உன் பாதம் மட்டுமே முத்தமிடும் -
பாக்கியம் பெற்றிருக்கிறது கடலலை ..!ஈரக்காற்று -
உதடுதொட்டு போகையில் ,
உன் முத்தமென்று நினைத்து -
ஏமாந்துபோகிறேன் ..!


நீ கொடுத்த முத்தமனைத்தும் -
திருப்பித் தரவேண்டுமென்றால் ,
என் வாழ்வு முழுதும் -
முழித்துக் கொண்டிருக்கவேன்டியதுதான் ..!


உன்னிடம் இருந்துவரும் அனைத்து மடல்களும் -
"அவசரமாய் ஆறு முத்தம் தேவை" என்றே -
முடித்து தொலைக்கிறது ..!
கணவுகளின் தொலைவு -
நிஜமாகும்வரை ,
முத்தங்களின் தொலைவு -
முடிந்துபோகும்வரை ..!நீ முத்தமிடும் பொழுதெல்லாம் -
நான் குட்டி குட்டி "அம்னீசியாவால்" ,
அவதிப்படுகின்றேன் ..!


அத்தனை கூட்டதினிடையே -
யாருக்கும் தெரியாமல் முத்தம் கேட்டாய் ,
தோட்டமே வைத்திருந்தாலும் -
திருட்டு மாங்காய்தான் சுகம்போலும் ..!
முத்தங்களுக்கு வர்ணம் சொன்ன முனிவர்-
நீயாகத்தான் இருப்பாய் ...
"பல் விளக்காத காலை முத்தம்", பச்சையாம் -
"சாமி கும்பிடும் இடைவெளியில் கொடுத்ததோ", வெண் நிறமாம் ;
"அதிகாலை முத்தம்", வெட்கச்சிவப்பாம் ;
"உச்சி வெய்யில் முத்தமோ", உஷ்ன மஞ்ஜளாம் -
"இரவு முத்தம் யாவும்", காரிருளாம் ..!தருவது நீ -
பெற்றுக்கொள்வது நான் ,
நந்தியாக வரும் வெட்கத்தை -
விரட்டிவிடு..!முத்தத்தின் தித்திப்பில் திசைமறந்து -
மளிகைக்கடையில் ,
“முத்தம் இரண்டுகிலோ வேண்டுமென்று”, உளரி -
மானம் போகக்கண்டேன் ..!காற்று வழி முத்தம் அனுப்புகையில் -
பத்திரமாய் மூடி அனுப்பு ,
விண்ணிலேயே தேன் கிடைப்பதால் -
தேனீக்களெல்லாம் திருடிக்கொண்டுபோகிறது ..!
இமைகள் படபடக்கின்றன ,
உதடுகள் துடிக்கின்றன ;
காதுகள் விடைக்கின்றன ...
ஒற்றை முத்தத்தில் ,
ஓறாயிரம் நிகழ்வுகள் ..!


உன் முத்தங்கள் யாவும் -
மொத்தமாக கிடைத்தால் ,
காசிக்கு போகாமலே -
மோட்சமடைவேன்..!

Tuesday, February 10, 2009

கண்ணக்குழியில் செய்த குழிப்பனியாரங்கள் ..!

வடைசுட்ட பாட்டி -
அதைத்திருடிய அண்டங்காக்கா ,
கதை பழையது என்றாலும் ,
" நீ சொல்கையில் புதிதாய் இருக்கிறது".குழிப்பனியாரம் பிடிக்குமென்று -
ஆசையாய் செய்துகொடுத்தாய் ,
இரண்டு மட்டும் இனிப்பாய் இருந்தது,
அவைமட்டும் உன் கண்ணக்குழியில் செய்தவையோ ..!எம்மொழியில் வேண்டுமானாலும் பேசிக்கொள் -
எனக்குப் புரியும்,
உன் பாவணை மட்டும் பார்ப்பதால் ..!


விடியற்காலையில்,
அறைக்கண்ணால் விழித்து,
அழகாய் சோம்பல் முறிக்கையில்;
இன்னொரு கவிதைக்கு வித்திடுகிறாய் ..!இப்படி ஒரு விடியல் கிடைப்பதால்தான் -
சூரியன் சூடேரிப்போகிறது,
தயவு செய்து -
கொஞ்சம் தாமதமாய் கண்விழி ..!


ஓடியாடி வேலை பார்த்து -
நீ உறங்கிபோகையில், உலகே ஓய்வெடுக்கிறது,
அடுத்த நாள் விழிக்கையில் -
குட்டிப்புயல் கிளம்பிவிட்டதென்று செய்தி வருகிறது ..!


அன்று ஓடை தாண்டுவதற்கு கரம்பிடித்தபொழுது -
விட்டுவிடாதே என்றாய் ...
இன்று பேருந்தில் நுழைவதற்கு -
கரம் நீட்டுகையிலும் ,
விட்டுவிடாதே என்றாய் ...
நாளை எனைக் கைப்பிடிக்கையிலும் ,
விட்டுவிடாதே என்பாய் ...
எனக்கு மட்டும்தான் தெரியும் ,
ஓடையிலிருந்தே உன் கரம் பிடித்துக்கொண்டிருப்பது ..!தூசுபட்டு கலங்கிய கண்கள்கண்டு ,
" ... அழாதடா ப்ளீஸ் -
யாராச்சும் அழுதா கூட ,
சேர்ந்து அழத்தான் தெரியும்,
ஆறுதல் படுத்த தெரியாது ", எனும் -
அப்பாவி பெண்ணாகவே இருக்கிறாய் ..!


எழுதிய கவிதையை ,
உனக்கும், விகடனுக்கும் அனுப்பினேன் ...
நல்லா இருக்குடா என்றாய் ,
விகடனைப்பற்றி மறந்துவிட்டேன் ..!


கடல்பார்க்கப் போகையில் -
அழகு குறைத்துச் செல் ,
தேவதையென்று நினைத்து -
அலையனைத்தும் உன் பின்னால் வந்துவிடும்,
அப்புறம் ஊரே வெள்ளக்காடுதான் ..!காற்றடித்தாலே -
குளிர்கிறதென்கிறாய் ...
உன் மடி பார்த்தாலே -
தூக்கம் வருகிறதென்கிறேன் ..!


அசைவம் வேண்டாம் -
அந்த ஜீவன்கள் பாவமென்றாய் ...
எனை மட்டும், தினம் தினம் -
பார்வையாலேயே கொத்தித் தின்பது நியாயமோ ..!

Thursday, February 05, 2009

Just keep me in your Prayers..!

For all those doubts,
I ask now is "Ex miss me" ...
For all those distance,
I ask now is "Ex mile me"...

Stand in the middle of train tracks -
Look at them going off in the distance,
Though not, but i believe -
They meet up yonder a ways ...
Just like both of us Stay apart -
But close in the beat of Heart ...

Distance does make the heart grow Fonder,
You're my Best Friend Forever ...
All that i want you is,
Just keep me in your Prayers..!


P.S: Hope this will make you want to reach out to those you love.

Monday, February 02, 2009

Left make it Right ...One more hard fought final and one more true winner.
Yes, Nadal did it again and against Federer in the Aussie open Tennis final.
The magical left hand did the trick again.

Rafa is always considered as best in grasscourt and weak against hard court. By lifting the australian open title, which is his 6th grandslam win proved what an excellent player he is, by adapting the game to suit all surfaces. He improved his service which is his weakness compared to his opponents, but federer seems like in his downfall and never looked like he spotted his own weakness and improved it. Might be players like Nadal, Murray, Verdasco, Djokovic improved their level to federer and going past beyond him and that made federer wondering what wrong he is doing to keep away from the 14th grandslam title to equal Sampras record.

Federer is considered as legend, but nadal is emerging like a giant monster to go past against him. Federer had beaten the likes of Roddick, Safin, Hewitt, Philippoussis, Baghdatis and Gonzalez in Grand Slam finals… good players all, some very good, but none of those players could be called great, even though they have five Grand Slam titles between them. But Nadal won 3 titles in his 6 grandslams against Federer who is considered as great, that proves he is becoming great player.

Great players bring in something special. At some point during their career, they demonstrate skills and toughness that they are invincible. How long one does so is perhaps what determines whether that player has a claim to be one of the greatest.Federer has not looked confident facing Nadal. He is not going to beat Nadal by engaging in long baseline rallies. He has become too predictable for Nadal.

In my opinion, we are watching the greatest player ever (best shotmaker, genius control etc.) against the greatest athlete and mental competitor ever in tennis (plus incredible groundstrokes). these two are going to be regarded as 2 of the best ever. No doubt.

Nadal is agressive player, but it's great to see that Nadal has a special respect for federer and always considered him as champion and legend. Nadal never jumped in joy or scream like anything after winning the matches against federer. This one character will be appreciated and respected by all.

But Sad that Federer always take away Rafa's joy by crying like a baby. When Rafa lost the Wimbledon final in 2007 Rafa cried in the locker room and not in full view -which means he didn't take Federer glory away from him.

Federer has done it once again by saddening Rafa and not allowing Rafa to take his full acclaim for all his hard work. He needs to sort himself out and act in a more professional manner. Human emotions has to be repected and its hard to digest the loss. By all means, cry but don't do it so dramatic that the crowd feel sorry for you and take away the joy from the winner.


All set for the next Wimbledon Grandslam and the race will be among Nadal, Federer, Murray, Verdasco ...

Nadal's era Continues... Go Rafa go ..!