Monday, November 03, 2008

தேவதைகளின் இருப்பிடம் ..!

புதுத்தோழி கிடைத்த சந்தோஷத்தில் ,
மறந்துவிட்டேனென்று -
என் இராமன் கோபித்துக்கொண்டான் ...
அவளுக்கும் உனைத்தான் பிடிக்குமென்று -
அழகாய் பொய்சொல்லி சமாளித்தேன் ..!


அவளுக்கும் துளசிமாலை பிடிக்குமெனச்சொல்லி -
பேச்சை மாற்றினேன் ,
என் கடவுளுக்கு பிடித்ததே -
உனக்கும் பிடிக்கிறதென்று அவளிடம் சொன்னாயாயென்று ,
இராமன் வம்பிழுத்தான்..!


தேவதைகளின் இருப்பிடம் தெரியுமாவென்று -
இராமனிடம் கேட்டேன் ,
தெரிந்துகொண்டே கேட்காதே -
காற்று வரட்டும் கிளம்பு என்றான் ..!


பாட்டியின் கதைகளில்தான் -
தேவதையைபற்றி கேட்டுள்ளேன் ...
இப்படித்தான் இருக்குமென்று ,
இன்றுதான் கண்டுகொன்டேன் ..!


நிலவுக்கு வயது -
இருபது கோடி ஆண்டுகளாம் ...
எனக்கு தெரிந்து -
25 வயதுதானே ஆகிறது ..!


முதல் சந்திப்பில் ,
முத்துக்களாய் உதிர்த்த வார்த்தைகள் -
நியாபகம் உள்ளதா என்றாய் ...
முகத்தை பார்ப்பதிலேயே ,
முழு நேரத்தையும் செலவழித்ததை -
எப்படிச்சொல்வேன் உன்னிடம் ..!


திருவிழாவிற்கு எல்லோரும் அலங்காரம் செய்கையில் ,
நீ மட்டும் அழகை குறைத்துக்கொண்டிருந்தாய் ?
சாமியைவிட சற்றுகுறைவான அழகில் -
இருக்கவேண்டுமென்ற நல்லெண்ணத்தில் ..!



எனக்குப்பிடித்த புத்தகம் கேட்டதற்க்கு ,
சந்திக்கும்பொழுது தருகிறேன் என்றாய் ...
புத்தகம் கேட்டதே ,
உனைப்பார்க்கத்தானென்று அறியாமல் ..!


இந்தப்புத்தகம் வாங்க -
இந்தியா செல்லவேண்டுமென்றாய் ...
அடிப்போடி பைத்தியம் ,
அடுத்த தெருவிலிருக்கும் 'Starbucks'ல் சந்திக்கத்தானென்று -
உண்மை சொன்னேன்..!



இந்தக்கவிதையெல்லாம் உபயோகமாக -
தோழியொருவள் கிடைக்குமாவென்று யோசித்தேன் ...
நானிருக்க நீயெதற்க்கு யோசிக்கவேண்டுமென்று -
திட்டித்தீர்த்தாய் ..!



கவிதைவர காரணம் கேட்டாய் ...

காதல்கொள்வதால் வரலாமென்றேன் ,
கிறுக்குப்பிடித்தாலும் வருமென்று நக்கலடித்தாய் ...
காதலும் ஓர் கிறுக்குத்தனம்தானடி ..!



காபி வரட்டும் ,

தலையில் கொட்டுகிறேன் என்றாய் ...
ஏற்கனவே ,
காதல் தேனீ கொட்டிவிட்டது ..!



போதும் விளையாட்டு -
புறப்படலாம் என்றாய் ,
நிஜமாகவே ஏதேனும் விளையாடலாமென்றேன் ...
என் விளையாட்டுப்பொருளே நீயெனச்சொல்லி -
ஏமாற்றி வென்றுவிடுகிறாய் ..!



முதன்முதலாய் தோல்விகளை -

நேசிக்க கற்றுக்கொண்டேன் ,
வென்றது நீயென்பதால் ..!



என்னடா ஒன்றுமே பேசாமல் வருகிறாயென்றாய் ...
ஆர்ப்பாட்ட பேச்சுக்கள் வேண்டாம்,
அழகிய புன்னகைகூட வேண்டாம் ,
அருகில் அமர்ந்து வா போதும் ..!



எனையும் உன் வீட்டிற்கு -

அழைத்துப்போ என்றாய் ...
பூஜையறைக்கு இன்னொரு சாமி சிலை -
வாங்கி வருவதாய் அம்மாவிற்கு செய்தியனுப்பினேன் ..!


Part 2 -->
Part 3 -->

1 comment:

Anonymous said...

Nice poems dude...is this imaginary poems or inspired by someone? if it is later, ur frnd is very lucky 2 hv such a good friend as a poet.