அந்தி சாயும் வேளை, 
 ஒற்றையடி பாதையோரம் - 
 ஒய்யாரமாக ஒரு சிறுமி அமர்ந்திருந்தாள், 
 அவளருகில் அழகிய நாய்க்குட்டி … 
 சிறுமியின் கையில் சிறிய ரொட்டி , 
 கொஞ்சம் பிய்த்து - 
 கொஞ்சி கொஞ்சி ஊட்டினாள் , 
 நன்றி மறவா நாய்க்குட்டி - 
 நக்கி நக்கி விளையாடியது … 
 இன்னும் கொஞ்சம் கொடுத்தாள், 
 இம்முறை நாய்க்குட்டி உரிமையோடு , 
 சிறுமியின் மடியில் அமர்ந்தது … 
 எஞ்ஜிய ரொட்டியையும் - 
 நாய்க்குட்டிக்கு ஊட்டிவிட்டு , 
 பசி மறந்து - 
 புன்னகையோடு கிளம்பிச்சென்றாள் … 
 சில நேரங்களில்,
 மனிதர்களையும் நேசிக்க தோண்றுகிறது ..!

3 comments:
Wow...so cute in very simple words da... it shows 'Love is metaphor of life'. here is my frnds real poetic talent comes out.
Heyy Beautiful Prabhu …
Lovely depiction …. Nice Pen art
Prabhu… kalakeyteengha…
US is making you the best poet in the recent days…
Post a Comment